செய்திகள் :

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், திங்கள் கிழமை பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை(பிப்.5) கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகிறது.

இதையும் படிக்க | தங்கத்தில் இப்போது முதலீடு சாத்தியமா?

வெள்ளி விலை நிலவரம்

அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.107-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.1,07,000-க்கு விற்பனையாகிறது.

விலை உயர்வுக்கு காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முக்கிய நடவடிக்கைகள், பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

காலை 11 மணி நிலவரம்: ஈரோடு கிழக்கில் 26.03% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொ... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை78,704.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11. 30 மணியளவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை!

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகார் வழக்கின் பேரில், மாநகராட்சி ஊழியர் கண்ணன் வ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 2 மணி நேரத்தில் சுமார் 11% வாக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 11 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வாக்குப்பதிவ... மேலும் பார்க்க

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.வாக்குப் பதிவு தொடங்க... மேலும் பார்க்க