செய்திகள் :

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை!

post image

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகார் வழக்கின் பேரில், மாநகராட்சி ஊழியர் கண்ணன் வீட்டில்

கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவா் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க |ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 2 மணி நேரத்தில் சுமார் 11% வாக்குப்பதிவு

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகார் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புதன்கிழமை காலை ஆய்வாளர் கீதா தலைமையிலான குழுவினர் மாநகராட்சி ஊழியர் கண்ணனுக்கு சொந்தமான வீடான காமாட்சி அம்மன் அவென்யூ இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் என பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் பணம் பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், 51 வார்டுகளை கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் பிட்டர் கண்ணன் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது: வானதி சீனிவாசன்

கோவை: திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினாா்.கோவை மக்கள் சேவை மையம் மற்றும்... மேலும் பார்க்க

இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி?: அமைச்சர் ரகுபதி கேள்வி

மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பிய... மேலும் பார்க்க

காலை 11 மணி நிலவரம்: ஈரோடு கிழக்கில் 26.03% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொ... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை78,704.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11. 30 மணியளவ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 2 மணி நேரத்தில் சுமார் 11% வாக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 11 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வாக்குப்பதிவ... மேலும் பார்க்க

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்த... மேலும் பார்க்க