செய்திகள் :

மோடியே ஒப்புக்கொள்கிறார்.. இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர்? அமைச்சர் ரகுபதி கேள்வி

post image

மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து மிகப் பெருமையாக உரையாற்றியிருக்கிறார்.

அந்த உரையை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருக்கும் அமைச்சர் ரகுபதி, பாஜக ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

விடியோவை இணைத்து, அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா?

தமிழ்நாட்டில் திரு.மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!

ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அமைச்சர்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 7 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.வெ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மா... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை! மூவருக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதம்!

தமிழக மீனவர்கள் 19 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது. அபராதம் கட்டத் தவறும் பட்சத்தில், சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜன. 26 ஆம் தேத... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நின்றிருந்த 18 வயது மேற்கு வங்க சிறுமி ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேரை காவல்துறைய... மேலும் பார்க்க

தைப்பூசம்: பழனி முருகன் கோயிலில் கொடியேற்றம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் 5-ஆம் தேதி ... மேலும் பார்க்க

வடமாநிலங்களைப் போல இங்கே பிரச்னை உருவாக்க நினைக்கிறார்கள்: அமைச்சர் சேகர் பாபு

தமிழ்நாட்டில், அண்ணாமலை, ஹெச்.ராஜா ஆகியோர் வட மாநிலங்களைப் போல இங்கேயும் பிரச்சினையை உருவாக்க நினைக்கிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.தமிழகத்தில் ஆட்சிக்கு ஒரு அப... மேலும் பார்க்க