செய்திகள் :

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!

post image

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் உள்பட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இன்று பள்ளியின் முன்பாக போராட்டம் நடத்தினர். குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

இதைத் தொடர்ந்து அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவிக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தில்லியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில், செ... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி அத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்... மேலும் பார்க்க

காலியாக இயக்கப்பட்ட கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவையிலிருந்து திண்டுக்கல் இடையே இன்று முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஆனால், இந்த சிறப்பு ரயில் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் முதல் ந... மேலும் பார்க்க

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 7 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.வெ... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை! மூவருக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதம்!

தமிழக மீனவர்கள் 19 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது. அபராதம் கட்டத் தவறும் பட்சத்தில், சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜன. 26 ஆம் தேத... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நின்றிருந்த 18 வயது மேற்கு வங்க சிறுமி ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேரை காவல்துறைய... மேலும் பார்க்க