செய்திகள் :

கிருஷ்ணகிரி: 8-ம் வகுப்பு மாணவிக்கு கருக்கலைப்பு; படுபாதகம் செய்த 3 ஆசிரியர்கள் கைது..

post image
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூருக்கு அருகிலுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்த 8-ம் வகுப்பு மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வராமலிருந்திருக்கிறார்.

`மாணவி ஏன் பள்ளிக்கு வரவில்லை?’ என்று தெரிந்துகொள்வதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியரே மாணவியை தேடி அவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, அதனால் கர்ப்பமடைந்து, கரு கலைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்ததையடுத்து தலைமை ஆசிரியர் அதிர்ந்து போனார். மேலும், `தமது பள்ளியின் ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர்தான் மாணவியிடம் அத்துமீறினார்கள்’ என மாணவி கூறியதைக் கேட்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளானார் தலைமை ஆசிரியர்.

பாலியல் வன்கொடுமை

இதையடுத்து, பெற்றோரிடம் அறிவுரைக் கூறி உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரியப்படுத்தினார் தலைமை ஆசிரியர். இதைத்தொடர்ந்து, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் `போக்சோ’ சட்டத்தில்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்கள் மூன்று பேரையும் கைது செய்திருக்கின்றனர். மூன்று ஆசிரியர்களையும் `சஸ்பெண்ட்’ செய்தும் உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கும், கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மாணவியின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் கொதித்தெழுந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

`இந்த படுபாத செயலில் ஈடுபட்ட 3 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆவேசமாக குரல் எழுப்பினர். `கட்டாயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இதே பர்கூருக்கு அருகேயுள்ள தனியார் பள்ளி ஒன்றில், என்.சி.சி பயிற்சி என்கிற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறிய சம்பவமும், தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், அதே பகுதியில் இன்னொரு பாலியல் விவகாரம் வெளிவந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பணியிடத்தில் பாலியல் தொல்லை; மாடியில் இருந்து குதித்த இளம்பெண்... முதலாளி உள்பட மூவர் தலைமறைவு

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியில் பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் பல பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த ஓட்டலில் வேலை செய்யும் பெண்கள் பக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடத்தில... மேலும் பார்க்க

Trump : நெருக்கப்படும் LGBTQ மக்கள்; `உங்கள் அணுகுமுறை சரிதானா அதிபரே?' - கொதிக்கும் திருநர் சமூகம்!

உலகில் வல்லரசு நாடாக திகழக்கூடிய அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கிறார். ஜனவரி 20-ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:30 மணி அளவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை உள்ளரங்கத்தில் ட்ரம்... மேலும் பார்க்க

Kolkata Rape case: ``நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தாலும் மறுப்பு கிடையாது.." -குற்றவாளியின் தாய்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. இது தொடர்பாக, சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப... மேலும் பார்க்க

சென்னையில் அதிர்ச்சி... மகளின் ஆபாச வீடியோக்களை விற்ற தம்பதி - பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்

சென்னையில் உள்ள ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நலக் குழு சார்பில் புகார் ஒன்று சில தினங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. அதில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை ஒரு கும்பல் பணத்துக்காக சமூக... மேலும் பார்க்க

`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கில் நடவடிக்கை

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிறுவன் ... மேலும் பார்க்க

Facebook: முகநூலில் அத்துமீறல்.. நடிகையின் பதிவுக்கு ஆபாச கமெண்ட்; 27 பேர்மீது வழக்குப்பதிவு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஹனிரோஸ். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தனியார் நிறுவனங்களின் திறப்புவிழாக்களில் கலந்துகொண்டு அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வார். இ... மேலும் பார்க்க