இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி அத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் இந்திரா தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
தற்போது மெளனம் பேசியதே தொடரில் நடிக்கவுள்ளதால், ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் மெளனம் பேசியதே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடர், ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஜகதாத்ரி தொடரின் மறு உருவாக்கம்.
இத்தொடரில் அசோக் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜோவிதா லிவிங்ஸ்டன் நடித்துவந்தார். இவர்களுடன் ஐரா அகர்வாலும் முதன்மை பாத்திரத்தில் தோன்றுகிறார்.
இந்நிலையில், மெளனம் பேசியதே தொடரில் எனது கதாபாத்திரம் மிகுந்த சுயநலம் கொண்டதாகவும், மன அழுத்தம் உடையதாகவும் உள்ளதால் அத்தொடரில் இருந்து விலகுவதாக ஜோவிதா அறிவித்திருந்தார்.
மேலும், சில மாதங்களாக ஓய்வின்றி நடிப்பதைப்போன்று உள்ளதாலும் தனிப்பட்ட முறையில் திருப்திகரமாக இல்லாததால், இத்தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்திரா தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவராவார். தற்போது மெளனம் பேசியதே தொடரில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | எதிர்நீச்சல் நடிகைகளுக்கு குவியும் அடுத்தடுத்த வாய்ப்பு!