விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 7 பேர் படுகாயம்
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வெடிவிபத்து நேரிட்ட ஆலையில் இருந்த ஐந்து அறைகளும் தரைமட்டமாகியிருப்பதாகவும், பட்டாசுகள் வெடித்து வருவதால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.