Kerala Lottery: கண்ணூரில் விற்பனையான லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு; அதிஷ்டசாலியை ...
Adani மகன் `ஜீத் அதானி' பெயரில் போலி 'வரன் கணக்கு' -ஷாக் ஆன shaadi.com CEO
சமீபத்தில் ஷார்க் டேன்க் இந்தியா நிகழ்ச்சியில் தோன்றிய அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, அவரது வருங்கால மனைவியான திவா ஷாவை எப்படிச் சந்தித்தார் என்பது குறித்துப் பேசியுள்ளார்.
அதானி ஏர்போர்ட் இயக்குநரான ஜீத் அதானி வரன் தேடும் தளமான ஷாதி.காம் CEO அனுபம் மிட்டல்லுக்கு அளித்த பேட்டியில், ஜீத்தின் நண்பர்கள் போலியாக ஷாதி டாட் காமில் அவர் பெயரில் கணக்கு தொடங்கியதாகவும் அதனை அனுபம் நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிப்ரவரி 7ம் தேதி, அஹமதாபாத்தில் ஜீத் அதானி - திவா ஷா திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணம் பெரும் ஆடம்பரங்கள் இல்லாமல் எளிமையாக நடைபெறும் என கௌதம் அதானி தெரிவித்திருந்தார்.
ஷார்க் டேக்ன் நிகழ்ச்சியில், ஜீத் அதானி தனக்கு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில் முயற்சிகளில் இருக்கும் ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பாக மாற்று திறனாளிகளின் வாழ்க்கை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.
மாற்று திறனாளிகளுக்காக பணியாற்ற விருப்பம்!
ஜீத்தின் பாட்டி, சிறுவயதில் அவரை முதியோர் இல்லங்கள் மற்றும் அனாதை ஆஸ்ரமங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் கொண்டிருந்ததாகவும், அதன் மூலம் இத்தகைய விழுமியங்கள் தனக்குள் உருவானதாகவும் ஜீத் அதானி தெரிவித்துள்ளார். மேலும் அவர் மும்பையின் மிட்டி கபேவைவுக்குச் சென்றபோது அங்கிருந்த மாற்றுத் திறனாளி தொழிலாளர்களின் உத்வேகம் தன்னை ஈர்த்ததாகவும் தெரிவித்தார்.
Adani Group அதன் தொழிலாளர்களில் 5% அளவுக்கு மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதை நோக்கி செயல்பட்டு வருவதாகவும் பேசினார் ஜீத் அதானி.
யார் இந்த திவா ஷா?
ஜீத் அதானி ஒரு குடும்ப நண்பர் மூலமாக திவா ஷாவை சந்தித்ததாகக் கூறினார். திவா, ஜெய்மின் ஷா என்ற வைர வியாபாரியின் மகள். 2023-ம் ஆண்டு திவா மற்றும் ஜீத்துக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது அதானி அறக்கட்டளையின் மாற்று திறனாளிகள் பிரிவில் திவா ஷா பணியாற்றுகிறார்.
போலி கணக்கு!
மேலும் அவர் 6 அல்லது 7-ம் வகுப்பு படிக்கும்போது உடனிருந்த நண்பர்கள் குறும்பு செய்யும் விதமாக ஜீத் அதானி என்ற பெயரில் ஷாதி டாட் காமில் கணக்கு தொடங்கியதாகக் கூறினார். "அந்த கணக்கு யாருடைய ஈ-மெயிலில், மொபைல் நம்பரில் தொடங்கப்பட்டது என்பது எனக்கு துளியும் நினைவில்லை" எனக் கூறியவர். அந்த போலி கணக்கை நீக்குமாறு ஷாதி டாட் காம் சி.இ.ஓ மிட்டலிடம் கேட்டுக்கொண்டார்.