மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் கூடுவோம்: செல்வப்பெருந்தகை
மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் நாளை(பிப். 6) அணிதிரள்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் கோயிலிலும் சிக்கந்தர் தர்காவிலும் நாளை மதநல்லிணக்க வழிபாடு நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இதையும் படிக்க: பிற்பகல் 1 மணி: தில்லி தேர்தலில் 33.31% வாக்குகள் பதிவு!
”அன்று அயோத்தி.. இன்று திருப்பரங்குன்றம்...
அயோத்தியில் கலவரத்தைக் முடித்தவர்கள், அயோத்தி நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தவர்கள் இன்று திருப்பரங்குன்றத்தில் தொடங்க முயற்சிக்கின்றனர்.
பாஜகவின் சதியை தமிழ்நாடு மக்களுடன் இணைந்து காங்கிரஸ் பேரியக்கம் முறியடிக்கும்.
மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு நாளை (06.02.2025) திருப்பரங்குன்றத்தில் அணிதிரள்வோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.