செய்திகள் :

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

post image

கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக பாஜகவை திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

மௌனி அமாவாசை நாளான ஜன.29 ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். இதன் விளைவாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்ததாக முதல்வர் யோகி தலைமையிலான உ.பி அரசு உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டிய உத்தரப்பிரதேச அரசை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பாதுகாக்கிறது என தமிழகத்தில் ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' புதன்கிழமை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

பாஜகவுக்கு உண்மையான பக்தி இருந்திருக்குமானால், அந்த நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். 'ஆனால், அதைச் செய்யப்படவில்லை.

"கோவிலுக்கு வெளியேயும் அரசியலை மட்டுமே தங்கள் பக்தியைக் காட்டியிருக்கிறார்கள் பாஜகவும் அதனைச் சேர்ந்தவர்களும். அதனால்தான் அலட்சியமாக கும்பமேளா நடத்தி மக்களை பலி வாங்கி இருக்கிறார்கள்," என்று குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விழாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது, "கட்டுப்படுத்த முடியாத கூட்டம்" மற்றும் இறப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பைப் பற்றி செய்தி வெளியிடக்கூடாது என்று "செய்தி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது" என்றும், அதன்படி, செய்தி மறைக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

"சம்பவம் நடந்து 17 மணி நேரத்திற்குப் பிறகுதான், இறப்பு எண்ணிக்கையை 30 என யோகி அரசு உறுதிப்படுத்தியது" என்றும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு "அனுமதிக்கப்படவில்லை" என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படிக்க |நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம்!

"பாஜக செய்தால் அல்லது யோகிகள் ஆட்சி என்றால் எதுவும் கேள்வி கேட்கக் கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ் (சங்கிகள்) சட்டம்.

"உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் நாற்பத்தெட்டு பேர் இறந்துள்ள நிலையில், அந்த மரணங்களைக் கூட மறைத்து, தவறான கணக்கைக் காட்டி, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உத்தரப்பிரதேச அரசை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது," என்று குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப்பிரதேச அரசு இறந்தவர்கள் 30 பேர் என்றாலும், மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடல்களை எண்ணியதன் அடிப்படையில் 48 என்று ஆதாரங்களுடன் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், கூட்ட நெரிசலில் இறந்த 30 பேரும் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை, அவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்தது, அதனால் இறந்ததாக அந்த மாநில அதிகாரிகள் கூறியதை மேற்கொள் காட்டிய 'முரசொலி' இந்த விபத்துகளுக்கு குழப்பம், குழப்பம் மற்றும் முறையான முன்கூட்டியே திட்டமிடுதல் இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை கும்பேளா காட்சிகள் காட்டிக் கொடுத்துவிட்டது என கூறியுள்ளது.

பிற்பகல் 3 மணி: ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.63% வாக்குகள் பதிவாகியுள்ளன.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு த... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:05-02-2025: தமி... மேலும் பார்க்க

இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ?: அண்ணாமலை கேள்வி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையால் அந்த பெண்ணின் கூச்சல் கேட்டு நல்லவர் ஒருவர் காவல்துறையை அழைத்ததால், அந்த பெண் தப்பிய நிலையில், நம் சகோதரிகளுக்கு பாதுகாப்... மேலும் பார்க்க

டாஸ்மாக்கில் கள்ளச்சாரயம்... திமுக வெட்கப்பட வேண்டும்: இபிஎஸ்

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது பற்றி கள்ளச்சாராய விற்பனை தன்னுடைய எக்ஸ் தளப் ப... மேலும் பார்க்க

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் கூடுவோம்: செல்வப்பெருந்தகை

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் நாளை(பிப். 6) அணிதிரள்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் கோயில... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு ... மேலும் பார்க்க