செய்திகள் :

ஈரோடு: ``பூத் நிர்வாகிகளின் பெற்றோர்களை திமுகவினர் மிரட்டுகின்றனர்'' -நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு

post image

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். வாக்குச் சாவடி மையங்களில் பார்வையிட்ட சீதாலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரோடு கிழக்குத் தொகுதியில் பல வாக்குச் சாவடிகளில் ஆளுங்கட்சி பிரமுகர்களால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. 70 சதவீத வாக்குச் சாவடிகளுக்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை முகவர்களாக நாம் தமிழர் கட்சி சார்பில் நியமித்துள்ளோம். அவர்களின் பெற்றோர்களை அழைத்து திமுக-வினர் மிரட்டுகின்றனர். அவர்களின் குடும்பத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டோம்.

திமுக விசி சந்திரகுமார், நாதக சீதாலட்சுமி

திமுக-வினர் சர்வ சாதரணமாக வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று வீடியோ எடுக்கின்றனர். செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களை வீடியோ எடுக்க கூடாது என மிரட்டப்படுகின்றனர். நீங்கள் ஏன் வாக்குச் சாவடிக்குள் வந்தீர்கள்? என கேட்டால், வேட்பாளரின் முகவர், ஆளுங்கட்சி பிரமுகர் என்று கூறுகின்றனர். இது ஏற்புடையதல்ல. வேட்பாளராகிய என்னை கட்சித் துண்டு போடக் கூடாது என்று திமுக-வினர் மிரட்டுகின்றனர்.

தங்களிடம் அதிகாரம் இருக்கிறது. அது தங்களுக்குத்தான் மீண்டும் கிடைக்கும் என திமுக-வினர் நினைக்கின்றனர். ஆனால், இளைஞர்கள் மற்றும் அரசியலில் மாற்றம் வர வேண்டுமென நினைப்பவர்கள் நாம் தமிழரைத்தான் ஆதரிப்பார்கள் என நம்புகிறோம். ஆனால், எங்கள் பூத் நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுப்பது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.

சீதாலட்சுமி

கடந்த தேர்தலின்போது, 60 ஆயிரம் வாக்குகள் பதிவாகவில்லை. ஆனால், இந்த தேர்தலில் மக்கள் தன்னெழுச்சியாக வாக்களிப்பதை காண முடிகிறது. பெண் ஒருவரின் வாக்கை வேறொருவர் போட்டது குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்தது. உரிய ஆதாரம் இல்லாமல் என்னால் குற்றம் சொல்ல முடியாது. வாக்குச் சாவடி முழுவதும் திமுகவினர் வசம்தான் உள்ளது" என்றார்.

உலகின் டாப் 10 வலிமையான நாடுகளின் பட்டியலை வெளியிட்ட Forbes... இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

பிரபல அமெரிக்க ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ் (Forbes), 2025-ம் ஆண்டின் உலகின் டாப் 10 வலிமையான நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, தலைமைப் பண்பு, பொருளாதார செல்வாக்கு, அரச... மேலும் பார்க்க

`இடைத்தேர்தல் தேவைற்றது; ஒரே நாடு ஒரே தேர்தல்தான் தீர்வு' - பாஜக எம்.எல் ஏ சரஸ்வதி கருத்து

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதி வாக்காளரான பாஜக-வைச் சேர்ந்த மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சரஸ்வதி, ஈரோடு சிஎஸ்ஐ பள்ளியில் வாக்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ``எனது வாக்கை செலுத்தியது யார்?'' -வாக்களிக்க வந்த பெண் அதிர்ச்சி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அத்தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டாம் முறையாக... மேலும் பார்க்க

ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்... தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.எம் பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரபல தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்த... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `பாபர் மசூதி போல பிரச்னை வேண்டாம்' -அரசு வாதம்; நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி

தமிழகத்தின் அமைதியை, மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் தீய நோக்கத்தில் சில மத அடிப்படைவாத சக்திகள் மதுரை திருப்பரங்குன்றத்தில் மத சர்ச்சைகளை வெடிக்க வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

Erode: 'ஓய்ந்த அனல்; கருத்தியல் மோதல்; திமுக vs நாதக' - ஈரோடு இடைத்தேர்தல் ரவுண்ட் அப்

ஈரோடு எம்.எல்.ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமான நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. கடந்த ஒருவாரமாக சூடு பிடித்த பிரசாரம் நேற்று (பிப் 3) மாலையோ... மேலும் பார்க்க