செய்திகள் :

தில்லி தேர்தல்: கேஜரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாக்களித்தனர்!

post image

தில்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 19.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தில்லி வடகிழக்கு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8 என்று எண்ணப்பட உள்ளன.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

தில்லியில் உள்ள லேடி இர்வின் பள்ளியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் புதுதில்லி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளருமான அரவிந்த் கேஜரிவால், மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் பெற்றோர்களுடன் வந்து வாக்களித்தார்.

தில்லியின் வளர்ச்சிக்காக தில்லி மக்கள் அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கேஜரிவால் தெரிவித்தார்.

தில்லி முதல்வர் அதிஷியும் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், 'இது உண்மைக்கும் பொய்களுக்குமான தர்மயுத்தம். உண்மை வெல்லும்' என்று கூறினார்.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தில்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, ஆம் ஆத்மி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயினும் வாக்களித்தனர்.

தில்லி தேர்தல் எதிரொலி: பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும்! -காங். எம்.பி.

பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும் என்று காங்கிரஸ் எம்.பி. சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி.யும் பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “... மேலும் பார்க்க

அகமதாபாத் சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

அகமதாபாத்தில் உள்ள சர்வதேச விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக விமான நிலையங்கள், விமானங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட முக... மேலும் பார்க்க

சிறிய அறைக்கு மாத வாடகை ரூ. 25,000! வைரலாகும் இளைஞரின் விடியோ!

பெங்களூருவில் மிகச்சிறிய அறைக்கு மாத வாடகையாக ரூ. 25 ஆயிரமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. சொந்த ஊரை விட்டு பெங்களூருவுக்கு வேலைக்குச் சென்ற இளைஞர், தான் வாடகைக்கு எடுத்த அறை குறித்து வெளியிட்ட விடியோ இணை... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பங்கேற்க பொறியாளர் ரஷீத்துக்கு 2 நாள்கள் பரோல்!

நாடாளுமன்றத்தில் பங்கேற்க பொறியாளா் ஷேக் அப்துல் ரஷீத்துக்கு 2 நாள்கள் பரோல் வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பரோல் வழங்கக் கோரி ரஷீத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் புனித நீராடிய உத்தரகண்ட் முதல்வர்!

பிரயாக்ராஜில் நிகழ்ந்துவரும் கும்பமேளாவில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி குடும்பத்துடன் புனித நீராடினார். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமிய... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: 300 கி.மீ.க்கு போக்குவரத்து நெரிசல்! வாகனங்களுக்குள்ளேயே 2 நாள்கள்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரயாக்ராஜ் வருவதால், அப்பகுதியைச் சுற்றி 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்கவரத்து நெரிசல் காணப்படுவதாக தகவல்கள் தெர... மேலும் பார்க்க