நாடாளுமன்றத்தில் பங்கேற்க பொறியாளர் ரஷீத்துக்கு 2 நாள்கள் பரோல்!
நாடாளுமன்றத்தில் பங்கேற்க பொறியாளா் ஷேக் அப்துல் ரஷீத்துக்கு 2 நாள்கள் பரோல் வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரோல் வழங்கக் கோரி ரஷீத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி விகாஸ் மஹாஜன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த 2017-இல் பயங்கரவாத சம்பவங்களுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் ரஷீத்தை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2019-இல் கைது செய்தனர். அதன்பிறகு அவா் தில்லி திகாா் திறையில் அடைக்கப்பட்டாா்.
பொறியாளரான ரஷீத், கடந்த மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார்.