அகமதாபாத் சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
அகமதாபாத்தில் உள்ள சர்வதேச விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக விமான நிலையங்கள், விமானங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்புவது வாடிக்கையாகி வருகின்றது.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜெட்டா-அகமதாபாத் விமானத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டது.
ஜெட்டாவிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த விமானம் இன்று காலை அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அனைத்து பயணிகளும்
இதையடுத்து உள்ளூர் காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தைச் சோதனையிட்டனர். அந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.