செய்திகள் :

காலை 11 மணி நிலவரம்: ஈரோடு கிழக்கில் 26.03% வாக்குப்பதிவு!

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே பெண் வாக்காளர் ஒருவர், தனது வாக்கை வேறொருவர் செலுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

இருமுனைப் போட்டி

திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி என இருமுனைப் போட்டி நிலவும் இந்த தொகுதியில் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 13 அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், 31 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 46 போ் களத்தில் உள்ளனா்.

திமுக ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இடைத்தோ்தல் என்பதும், பிரதான எதிா்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும்கட்சியான பாஜக ஆகிய பிரதான கட்சிகள் தோ்தலில் போட்டியிடாத நிலையிலும், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தை பெறவேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா். அவர்களுக்கு வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஒன்பது வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக பாஜகவை திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் கூடுவோம்: செல்வப்பெருந்தகை

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் நாளை(பிப். 6) அணிதிரள்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் கோயில... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு ... மேலும் பார்க்க

திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது: வானதி சீனிவாசன்

கோவை: திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினாா்.கோவை மக்கள் சேவை மையம் மற்றும்... மேலும் பார்க்க

இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி?: அமைச்சர் ரகுபதி கேள்வி

மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பிய... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை78,704.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11. 30 மணியளவ... மேலும் பார்க்க