செய்திகள் :

`நாங்க காதலிக்கிறோம்’ - 17 வயது சிறுமியை கடத்திச்சென்று, வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கைது

post image

மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் கடந்த மாதம் 7ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. மைனர் பெண் தனது பாட்டியுடன் வசித்து வந்தார். ஆனால் அவரது பெற்றோர் மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் வசித்து வருகின்றனர். அப்பெண் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் தனது பெற்றோருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் நான் எனது விருப்பத்துடன் வெளியில் செல்வதாகவும், என்னைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

உடனே அவரது பெற்றோர் தங்களது மகளை தேட ஆரம்பித்தனர். ஆனால் அப்பெண் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து தங்களது மகளை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தனர். காணாமல் போன பெண் மைனர் என்பதால் போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அப்பெண் தனது மொபைல் போனை ஆப் செய்து வைத்திருந்தார்.

அப்பெண்ணை காணவில்லை என்று அப்பெண்ணின் அத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்டவுடன் மைனர் பெண் தான் பாதுகாப்புடன் இருப்பதாக கூறி பதில் கொடுத்திருந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீஸார் அப்பெண்ணின் சோசியல் மீடியா பதிவு மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தனர். அப்பெண் மும்பை புறநகரில் உள்ள வீராரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் மைனர் பெண்ணும் மற்றொரு 24 வயது பெண்ணும் சேர்ந்து ஹோட்டலுக்கு வந்து சென்று இருப்பது தெரிய வந்தது. ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அவர்களுக்கு அறை கொடுக்க மறுத்துள்ளது.

அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் ஹோட்டலில் இறக்கி விட்ட ஆட்டோ டிரைவரிடம் போலீஸார் விசாரித்தனர். இதில் அவர்கள் பஸ் டெப்போவில் இறங்கியதும், புதிய சிம்கார்டு வாங்கியதும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது.

புதிய போன் நம்பர் போலீஸாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் இரு பெண்களின் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்தனர். அவர்கள் வீராரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீஸார் ரிசார்ட் சென்றனர். அங்கு மைனர் பெண்ணும், 24 வயது பெண்ணும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீஸார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இருவரும் ரிசார்டில் இருந்தவர்களிடம் தங்களை சகோதரிகள் என்றும், தேர்வு எழுத வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். மைனர் பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அப்பெண்ணுடன் இருந்த 24 வயது பெண் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு புதிதாக சேர்க்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மைனர் பெண் தனது வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து அவரை சிறார் முகாமிற்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அவர்களிடம் விசாரித்த போது தாங்கள் இருவரும் காதலிப்பதாக தெரிவித்தனர். இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கூகுளில் ஹோட்டல் புக் செய்தபோது 93,000 ரூபாயை இழந்த இளம்பெண் - என்ன நடந்தது?

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மோசடிகளால் பணத்தை இழப்பது மிகவும் எளிதாகிவிட்டது. சைபர் கிரைமில் ஈடுபடுபவர்கள் அசலை போன்று நகலை உருவாக்கி நம்ப வைத்து அதன்மூலம் பண மோசடி செய்கின்றனர்.அப்படித்தான் கூகுள... மேலும் பார்க்க

கிளம்பாக்கம்: இளம்பெண்ணுக்கு ஆட்டோவில் கூட்டுப் பாலியல் தொல்லை - லைவ் லோக்கேஷனால் தப்பித்தது எப்படி?

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 3-ம் தேதி இரவு வடமாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம... மேலும் பார்க்க

நெல்லையில் திருடிய ஸ்கூட்டர்... கோவில்பட்டியில் மீட்பு; விருதுநகர் பெண் கைது!

Aநெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் குமார். இவர், அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் வேலை முடிந்து சாப்பிடுவதற்காக குமார், தனது வீட்டி... மேலும் பார்க்க

வால்பாறை: எச்சரித்த வனத்துறை... கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி - பைக்குடன் தூக்கி வீசி தாக்கிய யானை!

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருக்கும். தற்போது யானைகள் வலசை காலம் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல... மேலும் பார்க்க

கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சிக்கிய பலே கொள்ளையன்

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டம்விட்டு பூட்டை உடைத்து திருடிய நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் தேனீர் கடை நடத்தி வந்த பஞ்சாக்ஷரி சங்கய்ய சுவாமி(37) என்ற அந்த... மேலும் பார்க்க

Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் துப்பாக்கிச் சூடு

சுவீடனில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிட்டதட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டு போலீசார் கூறுகையில், "பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச... மேலும் பார்க்க