இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
கூகுளில் ஹோட்டல் புக் செய்தபோது 93,000 ரூபாயை இழந்த இளம்பெண் - என்ன நடந்தது?
இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மோசடிகளால் பணத்தை இழப்பது மிகவும் எளிதாகிவிட்டது. சைபர் கிரைமில் ஈடுபடுபவர்கள் அசலை போன்று நகலை உருவாக்கி நம்ப வைத்து அதன்மூலம் பண மோசடி செய்கின்றனர்.
அப்படித்தான் கூகுள் பட்டியில் மூலம் ஹோட்டல் தங்குவதற்கு முன்பதிவு செய்த போது ஒரு பெண் ரூ.93 ஆயிரத்தை இழந்துள்ளார்.
சமீபத்தில் ஒரிசாவின் பூரியில் உள்ள ஒரு ஹோட்டலில் முன்பதிவு செய்தபோது இந்த ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.
ஹோட்டல் முன் பதிவு செய்வதற்காக 'Mayfair Heritage Puri’ எனத் தேடியபோது தோன்றிய முதல் லிங்கை க்ளிக் செய்துள்ளார். அதில் முன்பதிவு செய்வதற்கான செயல்முறையைத் தொடர்ந்துள்ளார், ஹோட்டல் தொடர்பான தகவலைக் கண்டறிந்த பிறகு அந்தப் பெண் அவர்களைத் தொடர்புகொண்டுள்ளார். தங்கும் அறை தொடர்பான படங்கள், தகவல்களை மின்னஞ்சல் மூலம் மோசடிக்காரர்கள் அந்தப் பெண்ணை நம்ப வைக்க அனுப்பியுள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பி முன்பதிவை உறுதிப்படுத்த ரூபாய் 93 ஆயிரத்து 600 ரூபாய் ஆன்லைன் மூலம் மாற்றியுள்ளார். அதன்பின்னர் அவருக்கு ஒரு போலியான இன்வாய்ஸ் கிடைத்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டபோது, அந்த அமைப்பு செயலிழந்துவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.
மறுநாள் காலையில் மோசடி செய்பவரிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்து கூகுள் பே செயலியை திறந்து அதில் ’பணம் செலுத்து’ என்பதை க்ளிக் செய்து வழங்கப்பட்ட முன்பதிவு ஐடியை உள்ளீடு செய்து உறுதிப்படுத்தலை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில் ஏதோ தவறு இருப்பதை அந்தப் பெண் உணர்ந்து அதனைச் செய்ய மறுத்து மீண்டும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலைக் கேட்டுள்ளார்.
அதன் பின்னர்தான் அந்த மோசடிக்காரர் தான் பிடிப்பட்டதை உணர்ந்து உடனடியாகத் தொலைபேசியை துண்டித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்த ஹோட்டலின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்களை தேடி தொடர்புகொண்ட போது அவர் பயன்படுத்தியது போலியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.