கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
சென்னை: அண்ணா சாலையில் ஸ்பைடர் மேனாக வலம் வந்த சுவீட்ஸ் கடைக்காரர் - பிடித்துச் சென்ற போலீஸார்
சென்னை அண்ணாசாலையில் ஸ்பைடர் மேன் உடையணிந்தவர், அவ்வழியாக சென்றவர்களிடம் படத்தில் வருவது போல் அங்கும் இங்கும் குதித்து காண்பித்தார். குழந்தைகளைப் பார்த்ததும் படத்தில் வரும் ஸ்பைடர் மேனாகவே அந்த நபர் மாறி அங்கும் இங்கும் துள்ளிக் குதித்தார். அதைப்பார்த்த குழந்தைகளும் பொதுமக்களும் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதையடுத்து அந்த ஸ்படைர்மேன் உடையணிந்தவர், அண்ணாசாலையில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டல் பகுதிக்குச் சென்றார். அங்கு அந்த ஸ்பைடர்மேன் செய்த செய்கைகள், சேட்டைகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் அண்ணாசாலையில் சேட்டைகளைச் செய்த இந்த ஸ்பைடர்மேனின் செய்கைகள் பிடிக்காமல் ஒரு தரப்பினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்பைடர்மேன் உடையணிந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் செய்யது அக்பர் அலி என்றும் ஹோட்டல் வளாகத்தில் சுவீட்ஸ் கடை நடத்தி வருவதும் தெரிந்தது. எதற்காக ஸ்பைடர்மேன் உடையணிந்தாய் என்று அவரிடம் விசாரித்தபோது, கடையில் வியாபாரம் சரியில்லை. அதனால் கடையின் விளம்பரத்துக்காக இப்படி செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை எச்சரித்த போலீஸார், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் தேவைப்பட்டால் விசாரணைக்கு வர வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு ஸ்பைடர்மேனான செய்யது அக்பர் அலியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...