10 ஆண்டுகளை நிறைவு செய்த என்னை அறிந்தால்!
நடிகர் அஜித் குமாரின் என்னை அறிந்தால் திரைப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
நடிகர் அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய படம் - என்னை அறிந்தால். 2015-ல் வெளியானது. அஜித்தின் முக்கியமான திரைப்படம் என்கிற அளவுக்குப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.
முக்கியமாக, இப்படத்தில் விக்டர் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கும் திருப்புமுனைப் படமாக இது அமைந்தது.
இதையும் படிக்க: விடாமுயற்சி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்ததுடன் கதையாகவும் உருவாக்கத்திலும் இயக்குநர் கௌதம் மேனனின் நல்ல படங்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இதனை, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.