செய்திகள் :

`நடிகர் ராஜனுடனான காதல்’ - மறைந்த பழம்பெரும் நடிகை புஷ்பலதா நினைவுகள் பகிரும் எஸ்.பி.முத்துராமன்

post image

பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். தமிழில் 'கொங்கு நாட்டு தங்கம்' படத்தின் மூலம் அறிமுகமானவர். அதற்கு முன்னரே தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார்.

புஷ்பா

நடிகை புஷ்பலதா தமிழில் 'யாருக்கு சொந்தம்', 'நானும் ஒரு பெண்', 'சிம்லா ஸ்பெஷல்', 'கற்பூரம்', 'பார் மகளே பார்', 'புதுவெள்ளம்', 'சாரதா', 'ஜீவனாம்சம்' உள்பட 100க்கும் மேலான படங்களில் ஹீரோயினாகவும், குணசித்திரமாகவும் நடித்திருக்கிறார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சில படங்களில் நடித்திருப்பதால், புஷ்பலதாவின் நினைவுகள் குறித்து அவரிடம் கேட்டோம்.

''ஏவிஎம். நிறுவனம் தயாரிப்பில் திருலோகசந்தர் இயக்கிய 'நானும் ஒரு பெண்' படத்தில் தான் ராஜன் அறிமுகமானார். அதில் இருந்து தான் அவரை எல்லோரும் ஏவிஎம். ராஜன் என சொல்ல ஆரம்பித்தனர். அந்த படத்தின் நாயகி புஷ்பலதா. இந்த படத்திற்கு முன்னரே அவர் 'ஆலயமணி', ''போலீஸ்காரன் மகள்', 'சாரதா', 'பணம் பந்தியிலே' என பல படங்களில் நடித்திருக்கிறார். 'நானும் ஒரு பெண்' படத்தில் புஷ்பலதா மாலதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ராஜனுக்கும் புஷ்பலதாவிற்கும் இந்த படத்தில் தான் காதல் அரும்பியது. அதன் பின் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

எஸ்.பி. முத்துராமன்

புஷ்பலதா, கதாநாயகி, குணசித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். எனது இயக்கத்தில் 'ஊருக்கு உபதேசம்', ''சகலகலா வல்லவன்' என சில படங்களில் நடித்திருக்கிறார். திறமையான நடிகை. அவருடன் பணியாற்றியது இனிய தருணங்கள். எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்கிறார் எஸ்.பி.முத்துராமன்.

மறைந்த புஷ்பலதா, புஷ்பாராஜன் என்ற பெயரில் சிவாஜி நடித்த 'லாரி டிரைவர் ராஜாகண்ணு' உள்பட சில படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

``எப்போதும் அக்கறையுடன் இருக்கக்கூடியவர், வருத்தமா இருக்கு" - புஷ்பலதா மறைவிற்கு கார்த்தி இரங்கல்

பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று (பிப்ரவரி 4) காலமானார்.தமிழில் ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான புஷ்பலதா 'யாருக்கு சொ... மேலும் பார்க்க

Mani Ratnam: ``இதற்கு இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது மணி சார்!'' - ராஜ்குமார் பெரியசாமி

`அமரன்' திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்து பாராட்டுகளை அள்ளினார். அதுமட்டுமின்றி, `அமரன்' திரைப்படத்திற்குப் பல்வேறு மேட... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.சென்னையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்திருக்கிறார். இவருக்கு வயது 87.எம்.ஜி. ஆர், சிவ... மேலும் பார்க்க

Parvati Nair: `அன்று பேசத் தொடங்கினோம்' - தொழிலதிபரை மணக்கும் பார்வதி நாயர்

நடிகை பார்வதி நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.பார்வதி நாயர் தமிழில் ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’, ‘கோட்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தனது நிச்சயதார்த்தப் புகைப்... மேலும் பார்க்க

Kudumbasthan: `மை டியர் பூதம்' மூசா; என்னை தத்தெடுத்துகிறேன்று அந்த அம்மா கேட்டாங்க - அபிலாஷ் பேட்டி

90-ஸ் கிட்ஸுக்கு `மை டியர் பூதம்' சீரியல் அவ்வளவு ஃபேவரைட்!அந்த சீரியலில் மூசாவாக நடித்திருந்த அபிலாஷை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்தான் `குடும்பஸ்தன்' திரைப்படத்தில் மாணிக்சந்த் என்ற கதாபாத்திரத்த... மேலும் பார்க்க