கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்
வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 27) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,704.60 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11. 30 மணியளவில் சென்செக்ஸ் 199.99 புள்ளிகள் குறைந்து 78,383.82 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.05 புள்ளிகள் உயர்ந்து 23,744.30 புள்ளிகளில் முடிந்தது.
சென்செக்ஸ் பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே இந்தியா, சன் பார்மா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் நிதி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, சொமாட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.