செய்திகள் :

``உலகில் வேறெங்கும் இல்லாத ஆன்மிக விழா இது..'' -மகா கும்பமேளா குறித்து சாய்னா நேவால் நெகிழ்ச்சி

post image
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா மிக விமர்சியாக நடந்து வருகிறது.

மொத்தம் 45 நாள்கள் இந்த கும்பமேளா நடக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்று வரும் நிலையில், இன்று பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி இருக்கிறார். பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் இந்த கும்பமேளாவில்  பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.

மகா கும்பமேளா
மகா கும்பமேளா

அந்தவகையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் இந்த மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி இருக்கிறார். கும்பமேளா குறித்து பேசிய சாய்னா நேவால், “ மகா கும்பமேளாவில் பங்கேற்க திரிவேணி சங்கமத்துக்கு வந்துள்ளேன். மாபெரும் திருவிழாவான இதில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் இதைப் போன்ற ஆன்மிக விழா உலகில் வேறெதுவும் இல்லை. இது நம் நாட்டில் நடப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நம் தேசம் மேலும் மேலும் முன்னேற பிரார்த்திக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Ratha Saptami | 7 ஜன்ம பாவங்கள் தீர ரத சப்தமி ஸ்நானம் செய்வது எப்படி? | Ep : 86

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் ரத சப்தமி சிறப்புகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில்... மேலும் பார்க்க

`பிணி தீர்க்கும் என நம்பிக்கை' - கேரளாவின் பிரபலமான 'கந்தகர்ணன் திரா' நிகழ்ச்சி | Photo Album

தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்தெய்யம்கந்தகர்ணன் தெய்யம்கந்தகர்ணன் தெய... மேலும் பார்க்க

Thai Amavasai | தை அமாவாசை தர்ப்பணம் செய்ய முடியாத சூழலில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது ?: Ep : 85

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் தை அமாவாசை சிறப்புகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில... மேலும் பார்க்க

`இனிதே நடந்தது' - திருமண வரமளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம்

திருமண வரமளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் பெங்களூரு ஸ்ரீகைலாச வைகுந்த க்ஷேத்ரத்தில் கடந்த 7-12-2024 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் நடைபெற்றது.ஆரம்பத்தில் கலச பூஜையும் விஷ்ணு சஹஸ்ரநாமமும் நடைபெ... மேலும் பார்க்க

நீலகிரி: அம்மனுக்குப் புனித குடை; பூசாரிகளுக்குச் செங்கோல்; பரவசத்தில் ஆழ்த்திய ஹெத்தை திருவிழா!

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் குல தெய்வமாக ஹெத்தையம்மனை வழிபட்டு வருகின்றனர். மூதாதையரான‌ ஹெத்தையம்மனை வாழ்வின் அங்கமாகவே போற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் ம... மேலும் பார்க்க