செய்திகள் :

காஸாவைக் கைப்பற்றும் அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு!

post image

காஸாவை அமெரிக்கா கைப்பற்றவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, உலகில் போர் நடக்க விடமாட்டேன் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது, ``இது அவ்வளவு எளிதான முடிவு அல்ல. காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். பாலஸ்தீனியர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. காஸா முனையில் உள்ள பாலஸ்தீனியர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவர். காஸா பகுதியில் வாழ முடியாது. அவர்களுக்கு இன்னொரு இடம் தேவை என்று நினைக்கிறேன்.

பாலஸ்தீனியர்கள் வேறு இடத்தில் குடியேறிய பிறகு, போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவை அமெரிக்கா கைப்பற்றும். அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் அமெரிக்க ராணுவம் ஈடுபடுத்தப்படும். காஸாவில் உள்ள வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களும் அகற்றப்படும்; சிதைந்த கட்டடங்களை தரைமட்டமாக்கப்படும்.

இதையும் படிக்க:டிரம்ப் மகனுக்கு சிறைத் தண்டனை வழங்கும் இத்தாலி?

பின்னர், அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள், வீடுகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் வகையில் ஒரு பெரியளவிலான பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா உருவாக்கும். பாலஸ்தீனியர்கள் உள்பட உலக மக்கள் வாழும் இடமாக காஸா உருவாகும். கூடுதலாக, ஹமாஸுக்கு பணத்தை வழங்கியதுடன், மனிதகுலத்துக்கு மிகவும் விசுவாசமற்ற ஐ.நா. நிவாரண மற்றும் பணி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து ஆதரவையும் நிறுத்தும் அறிவிப்பை வெளியிடுவதிலும் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, காஸா மீதான டிரம்ப்பின் புதிய யோசனை வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒன்றாகவும், வரலாற்றை மாற்றக்கூடியதாகவும் இருக்கும். இது மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நெதன்யாகு கூறினார்.

காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர், 2023-ல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேரை பணயக் கைதிகளாகவும் பிடித்து வைக்கப்பட்டனர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில், காஸாவில் 17,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 47,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 20.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் இருந்து புலம்பெயர்ந்தனர். காஸாவில் உள்ள 4,36,000 (92%) கட்டடங்கள் இஸ்ரேலிய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன; 546 பள்ளிகளில் 496 பள்ளிகள் சேதமடைந்துள்ளன, மேலும், 36 மருத்துவமனைகளில் 17 மட்டுமே செயல்படுகின்றன.

இதனிடையே, ஓராண்டுக்கும் மேலான இஸ்ரேல் - காஸா போரை நிறுத்த அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, போர் நிறுத்தக் காலமான 6 வாரங்களுக்கு இருதரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜன. 19 ஆம் தேதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் மூண்டுள்ளது.தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்... மேலும் பார்க்க

சுதந்திர பாலஸ்தீனம் உருவானால்தான் தூதரக உறவு: செளதி அரேபியா!

சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கிய பிறகே இஸ்ரேலுடன் தூதரக ரீதியிலான உறவை மேற்கொள்வோம் என்று செளதி அரேபியா தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கிடையே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர... மேலும் பார்க்க

டிரம்ப் மகனுக்கு சிறை தண்டனை வழங்கும் இத்தாலி?

இத்தாலியில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை வேட்டையாடிதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர் மீது இத்தாலி அரசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... மேலும் பார்க்க

எச்-1பி, எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்! இந்தியர்களுக்கு பாதிப்பு!

எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.அமெரிக்காவில் ஜோ பை... மேலும் பார்க்க

திருநங்கைகள் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை: கையெழுத்திடுகிறார் டிரம்ப்

திருநங்கைகளாக மாறியவர்கள் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிறப்பால் ஆ... மேலும் பார்க்க

ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 போ் காயம்

ஸ்வீடனின் ஆரெப்ரோ நகரிலுள்ள வயதுவந்தோருக்கான கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போ் காயமடைந்தனா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:தலைநகா் ஸ்டாக்ஹோமுக்கு சுமாா் 2... மேலும் பார்க்க