இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
அமெரிக்காவிலிருந்து 104 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் வந்த ராணுவ விமானம்
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம் இன்று பிற்பகல் 3 மணியளவில், அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்துள்ளது. இதில் 79 ஆண்கள், 25 பெண்கள் என 104 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வந்து இறங்கி விமானத்தில் ஹரியாணா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா 33 பேரும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேரும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் விவரம் பதிவு செய்த பின் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் நேற்று தகவல் தெரிவித்திருந்தது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றவுள்ளதாக அறிவித்தாா். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமா் மோடி நல்ல முடிவை எடுப்பாா் என பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பின் கடந்த 27-ஆம் தேதி அவா் கூறினாா்.
இதுவரை 18,000 இந்தியா்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் படிப்படியாக திருப்பி அனுப்பப்படுவர் என்றும் கூறப்படுகிறது