பெல் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
Ed Sheeran: சென்னையில் கான்சர்ட் நடத்தும் பிரிட்டிஷ் பாடகர்; பேரன்பைக் கொடுக்கும் மக்கள்- யார் இவர்?
இங்கிலாந்தில் பிறந்த இவர் சென்னையில் கான்செட் நடத்தும் அளவிற்கு ரசிகர் கூட்டம் இருப்பது பெரும் பிரமிப்பை உண்டாக்குகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா வந்த இங்கிலாந்து இசைக் கலைஞருக்கு இந்தியாவில் இவ்வளவு வரவேற்பு எப்படி? யார் இந்த எட் சீரன்?
இங்கிலாந்தில் உள்ள எட்டன் பிரிட்ஜ் என்னும் இடத்தில் பிறந்தவர் தான் எட் சீரன். இவருடைய முதல் பாடலே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் இவர் பல இசை விருதுகளை வாங்கியுள்ளார்.
சீரனின் பாடலுக்கும் இசைக்கும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனாலே இவர் உலகளவில் பிரபலமான பாடகராக உள்ளார். சிறு வயதிலிருந்தே இசை மீதான ஆர்வத்தால், தனது 11 வது வயதிலேயே முதல் பாடலை எழுத ஆரம்பித்திருக்கிறார். அப்படி முதல் முதலாக 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட ’+’என்ற ஆல்பம் பல இசை ரசிகர்களை சீரனை திரும்பிப் பார்க்கச் செய்தது.
இதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு The A Term என்ற முதல் சிங்கிளையும் வெளியிட்டார். முதல் ஆல்பத்திற்கு கிடைத்த வரவேற்பை போலவே இதற்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த சிங்குளுக்காக பிரிட் விருதையும், பிரிட்டிஷ் பெஸ்ட் சோலோ சிங்கர் என்ற விருதையும் வென்றார். அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட Multiple, Divide ஆகிய ஆல்பங்களும் உலகளவில் ஹிட்டாகி அவருக்கு விருதுகளைக் குவித்தன.
இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் இவர் உலகம் முழுதும் பயணம் செய்து இசை நிகழ்ச்சியை நடத்துவது தான் சீரனின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சீரன் இந்தியாவிற்கு கடந்த வருடம் மார்ச் மாதம் மும்பையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சியின்போது பேசிய எட் சீரன், இந்தியாவில் ”அளவற்ற அன்பை உணர்ந்து கொண்டிருக்கிறேன்..பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தினாலும் அங்கு இருப்பவர்கள் இசையின் உற்சாகத்தை உணர்ந்தாலும் பெரிய அளவில் வெளிக்காட்ட மாட்டார்கள், ஆனால் இந்திய ரசிகர்கள் துடிப்பையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்துவார்கள், அதனாலே இந்தியாவில் இசை கச்சேரி நடத்துவது பிடித்திருக்கிறது”என்று கூறியிருந்தார். இந்த இசை நிகழ்ச்சி பெரிய அளவு வரவேற்பைப் பெற்றது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் புனே ஹைதராபாத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிலையில் தான் சீரன் சென்னை ஓய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
மாலை 6:00 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் பிற்பகல் 3 மணி முதல் ஏராளமான பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர் சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
தேனாம்பேட்டை பக்கத்திலிருந்து பார்வையாளர்களை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகள் செனோடாப் சாலை அல்லது காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2வது தெரு (நந்தனம் நீட்டிப்பு) வழியாக மட்டுமே அரங்கத்தை அடைய முடியும். சைதாப்பேட்டை பக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வழியாக வலதுபுறம் சென்று சேமியர்ஸ் சாலையில் 'யு' திருப்பம் எடுத்து லோட்டஸ் காலனி வழியாக செல்லலாம்.
அண்ணா சாலையில் உள்ள YMCA பிரதான நுழைவாயிலில் VVIP பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் கலைஞர்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
பார்வையாளர்கள் மெட்ரோ ரயில், எம்டிசி பேருந்துகள் மற்றும் எம்ஆர்டிஎஸ் ரயில்கள் போன்ற பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி நடைபாதையைப் பயன்படுத்தி மைதானத்திற்கு நடந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.