செய்திகள் :

கேஜரிவால் கொள்கையால் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!

post image

தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு சில நாள்களே உள்ளநிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்.

தில்லியில் ஆம் ஆத்மி கவுன்சிலர்களான பாப்ரோலா வார்டு கவுன்சிலர் ரவீந்தர் சோலங்கியும், மங்களபுரி கவுன்சிலர் நரேந்தர் கிர்சா இருவரும் ஆம் ஆத்மி கட்சியைவிட்டு விலகி, தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்சதேவா மற்றும் பாஜக எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலின் அரசியல் மற்றும் கொள்கையால் ஏமாற்றமடைந்ததால், கவுன்சிலர்கள் இருவரும் ஆம் ஆத்மியைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக எம்.பி. கமல்ஜீத் கூறினார்.

இதையும் படிக்க:பிரதமர் மோடிக்கு கேஜரிவால் கடிதம்!

தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப். 5 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப். 8 அன்று வெளியிடப்படவுள்ளன. இந்தத் தேர்தலில் முன்னணி கட்சிகளாக ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தில்லியில் 2015 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் தீா்க்கமான வெற்றிகளைப் பெற்ற ஆம் ஆத்மி இந்த தோ்தலிலும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

அதே சமயம், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லியில் ஆட்சியில் இல்லாத பாஜக, மீண்டும் ஆட்சிக்கு வருவதை நோக்கமாகக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

வயிற்றுக் கோளாறு காரணமாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உடல்நலம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக நான் இன்று காலை மருத்... மேலும் பார்க்க

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் பலி... 16 பேரைக் காணவில்லை: இந்திய வெளியுறவு அமைச்சகம்

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேரைக் காணவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்... மேலும் பார்க்க

இணையப் பயன்பாடு: நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிகரிப்பு!

நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு விகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இன்டர்நெட் அன்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) மற்றும் காந்தார் நிறுவனமும் இன்டர்நெட் இன்... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: நாளை தீர்ப்பு வெளியாகிறது!

கொல்கத்தா ஆர்ஜிகார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மர... மேலும் பார்க்க

அமலாக்கத்துறையிடம் பிரச்னை உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் குற்றச்சாட்டு

புது தில்லி: அமலாக்கத்துறையில் ஏதோ பிரச்னை உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற... மேலும் பார்க்க

தில்லி எய்ம்ஸில் காத்திருந்த நோயாளிகளை சந்தித்த ராகுல்!

மக்களவை எத்திக்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ... மேலும் பார்க்க