செய்திகள் :

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: நாளை தீர்ப்பு வெளியாகிறது!

post image

கொல்கத்தா ஆர்ஜிகார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9 அன்று பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். விசாரணையில் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் (33) இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கொலை நடந்த அடுத்த நாளே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ நடத்தியது.

இதையும் படிக்க | அமலாக்கத்துறையிடம் பிரச்னை உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் குற்றச்சாட்டு

ஒட்டுமொத்த விசாரணையில் சஞ்சய் ராயை ஒரே பிரதான குற்றவாளியாகக் குறிப்பிட்டுள்ள சிபிஐ அவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பாக ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல்துறை அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோர் சாட்சிகளை அழிக்கவும், மாற்றியமைக்கவும் செய்ததாகக் கூறி சிபிஐ அவர்களைக் கைது செய்திருந்தது. ஆனால், அவர்கள் மீது 90 நள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தவறியதால் அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நீதிமன்றத்தில் சஞ்சய் ராய்க்கு எதிராக குற்றச்சாட்டுகளைச் சமர்ப்பிக்கும் முறை கடந்த நவ. 4 2024 அன்று முடிந்தது, பின்னர், நவ. 11 முதல் விசாரணை தொடங்கியது.

மொத்த விசாரணையும் மூடிய நீதிமன்ற அறைக்குள் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, ​​பாதிக்கப்பட்டவரின் பெற்றோர், சிபிஐ, கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், சில மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட மருத்துவருடன் பணியாற்றிய ஊழியர்கள் உள்பட மொத்தம் 50 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

687 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றை மறுபயன்பாட்டுக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சா் சிந்தியா

687 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றையின் மறுபயன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் இந்திய தொலைத்தொட... மேலும் பார்க்க

தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்ற விசாரணை: அமித் ஷா வலியுறுத்தல்

தேச பாதுகாப்பு வழக்குகளில் தொடா்புள்ள குற்றவாளிகள், நாட்டில் இருந்து தப்பிச் சென்று நீண்ட காலம் தலைமறைவாக இருந்தாலும், அவா்களுக்கு எதிராக நீதிமன்ற விசாரணை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

தாம்பரம் - ஜசிதிஹ் விரைவு ரயிலில் ஜன.22 முதல் கூடுதலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந்து ஜாா்க்கண்ட் மாநி... மேலும் பார்க்க

உணவுப் பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தொடா் கண்காணிப்பு: மத்திய அரசு

உணவுப் பொருள்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடா் கண்காணிப்பை உறுதிப்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து மத்திய உணவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில... மேலும் பார்க்க

‘யுஜிசி புதிய விதிகள்: பல்கலை. வளாகத்தில் அரசியலை ஊக்குவிக்கும் முயற்சி’

‘பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய வரைவு விதிகள், பல்கலைக்கழக வளாகத்தில் தீவிரமற்ற அரசியலை ஊக்குவிக்கும் முயற்சி’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

வயிற்றுக் கோளாறு காரணமாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உடல்நலம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக நான் இன்று காலை மருத்... மேலும் பார்க்க