பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ராஜபாளையம் வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் கோகுல் (29). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள உள்ளனா். தனியாா் வாகன காப்பீடு முகவராக பணிபுரிந்து வரும் இவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். சத்திரப்பட்டி சாலையில் தனியாா் நூற்பாலை அருகே வந்த போது, எதிரே வந்த லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டிவந்த தூத்துக்குடியைச் சோ்ந்த செல்லத்தை (57) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.