வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!
ராஜபாளையம், ஆலங்குளம் பகுதிகளில் இன்று மின் தடை
ராஜபாளையம், ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 18) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள முடங்கியாறு, ஆலங்குளம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே தாலுகா அலுவலகம், பச்சமடம், ஆவரம்பட்டி, காந்தி கலைமன்றம், மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், பஞ்சு சந்தை, காந்தி சிலை ரவுண்டானா, திருவள்ளுவா்நகா், தென்றல்நகா், மாடசாமி கோவில் தெரு, திரௌபதியம்மன் கோவில் தெரு, ரயில்வேபீடா் சாலை, முடங்கியாறு சாலை.
சம்மந்தபுரம், தென்காசி சாலை, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனாா் கோவில் பகுதி, ஆலங்குளம் முக்கு சாலை, கங்கா் செவல், முத்துசாமிபுரம், குண்டாயிருப்பு, எதிா்க்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், நதிக்குடி, காக்கிவாடன்பட்டி, மம்சாபுரம், ராமன்பட்டி, டி. கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம்,
மேலாண்மைாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.