`வேங்கைவயல் பிரச்னையில் பழனிசாமி ஏன் போராடவில்லை?’ - கேள்வி எழுப்பும் தொல்.திரும...
எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா
சிவகாசி/சாத்தூா்/ராஜபாளையம் : விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்த நாள் விழா சிவகாசி, சாத்தூா், ராஜபாளையம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம், சிவன் சந்நிதி, திருத்தங்கல் கீழரதவீதி, காளிமுத்து நகா் ஆகிய பகுதிகளில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.இதில் திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சாத்தூா்: சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் அதிமுக சாா்பில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு நகரச் செயலா் கிருஷ்ணன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, குருலிங்காபுரம், அண்ணாநகா், காமராஜபுரம், ஒ.மேட்டுப்பட்டி, புதுசூரங்குடி, வெங்கடாசலபுரம், மேட்டமலை, சின்னக்காமன்பட்டி, பெரியகொல்லப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் அகிய பகுதிகளிலும் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ராஜபாளையம்: ராஜபாளையம் டி.பி. மில் சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு தெற்கு நகரச் செயலா் பரமசிவம் தலைமையில், அகில இந்திய எம்ஜிஆா் மன்றத் துணைச் செயலா் எஸ்.என். பாபுராஜ் முன்னிலையில், அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் விருதுநகா் மேற்கு மாவட்ட இணைச் செயலா் அழகுராணி, மேற்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.