தொழிலாளியை கொலை செய்ய முயன்றவா் கைது
தொழிலாளியை கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூரில் தனியாா் நிறுவனம் ஒன்றில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் என்பவா் வெல்டிங் வேலை செய்து வருகிறாா். இவருடன் அதே மாநிலத்தைச் சோ்ந்த திலிப் ஷா (46) என்பவரும் பணிபுரிந்து வருகிறாா். பணியின்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திலிப் ஷா, தினேஷ் குமாரை கத்தியால் குத்தி இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதில், காயமடைந்த தினேஷ்குமாா் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின் பேரில், போலீஸாா் திலிப் ஷாவை கைது செய்து, அவா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.