13 கி.மீ., 13 நிமிடங்கள்: ஹைதராபாத் மெட்ரோவில் எடுத்துச்செல்லப்பட்ட இதயம்!
Morocco: கொல்லப்படும் 30 லட்சம் நாய்கள்- பின்னணி என்ன?
30 லட்சம் தெரு நாய்களை கொல்ல மொராக்கோ அரசு முடிவு செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
2030 ஆம் ஆண்டிற்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் மொராக்கோ, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கால்பந்து தொடரை பிரமாண்டமாக நடத்தி முடிக்க மொராக்கோ நாடு இப்போதே திட்டமிட்டு வருகிறது. இந்தத் தொடரைக் காண சுற்றுலா பயணிகள் அதிகம் வருகைப் புரிவார்கள் என்பதால் நகரங்களைச் சுத்தம் செய்வதற்காக சுமார் 30 லட்சம் தெருநாய்களைக் கொல்ல மொராக்கோ அரசு திட்டமிட்டிருக்கிறது.
அங்கு இப்போதே பல ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களைச் செலுத்தியும், துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் நாய்கள் கொலை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலைக் கண்டித்து உலகெங்கும் உள்ள விலங்கு நலக் குழுக்களும், ஆர்வலர்களும் மொராக்கோ அரசுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மொராக்கோவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் ஜேன் குடால், FIFA-வின் பொதுச் செயலாளர் மத்தியாஸ் கிராஃப்ஸ்ட்ரோமுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், ''மொராக்கோவில் தெரு நாய்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களில் பலர் விலங்கு பிரியர்கள்.
கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இந்தச் செயலை FIFA வேடிக்கை பார்க்கிறது. தெரு நாய்களைக் கட்டுப்படுத்த எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.