வாழப்பாடியில் 4 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு: மர்ம கும்பல் துணிகரம்!
ஈரோடு: பைக்கில் அதிவேக பயணம்... சாலை விபத்தில் இன்ஸ்டா பிரபலம் உயிரிழப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல யூ டியூப் மற்றும் இன்ஸ்டா பிரபலமான ராகுல். இவர் நேற்று இரவு, கவுந்தப்பாடி பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதிவேகத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், தலை மற்றும் கையில் படுகாயம் அடைந்த ராகுலை அங்கிருந்தவர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோத்தபோது ராகுல் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராகுலின் உடல் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்து கருங்கல்பாளையத்தில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தலைக்கவசம் அணியாததும், அதிவேகமாக வந்ததுமே ராகுலின் உயிரிழப்புக்கு காரணம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.