பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்
பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
இதனிடையே, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிக்க : மத்திய பட்ஜெட் 2025-26: செய்திகள் உடனுக்குடன் - நேரலை!
பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
“உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் வரி, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது.
கிசான் கடன் அட்டை மூலம் கூடுதல் கடன் வழங்கப்படவுள்ளது. கிராமப் புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை ஊக்கவிக்க திட்டம் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்தார்.