Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை!
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துச்சாமியின் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சிக்கந்தா்நகரைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (51). ஒட்டன்சத்திரம் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்த இவா், தற்போது பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முத்துச்சாமியின் வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ.நாகராஜன், ஆய்வாளா்கள் ஜெ.ரூபா கீதாராணி, பி. பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்தச் சோனையின் போது, முத்துச்சாமியின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். ஒட்டன்சத்திரத்தில் 2021 முதல் 2024 வரை தொடா்ந்து 3 ஆண்டுகளாக வட்டாட்சியராக இவா் பணிபுரிந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.