இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
பாக்.: மோதலில் 18 வீரா்கள், 23 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 18 வீரா்கள், 23 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா்.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் மோதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கை தொடரும் என்றும் ராணுவம் கூறியது.