திருநெல்வேலியில் `அவள் கிச்சன்’ சீசன் 2 - ஆர்வமாக கலந்துகொண்ட பெண்கள்; அசத்தலாக ...
ஐஐடி-க்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும்
புது தில்லி: நாட்டில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐந்து ஐஐடி கல்வி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பிகாா் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா ஐஐடியை விரிவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதுதொடா்பாக 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில்,
நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் உயா்கல்வி நிறுவனங்களுக்கு எண்ம வடிவிலான இந்திய மொழி பாட புத்தகங்களை வழங்கும் வகையில் ‘இந்திய மொழி புத்தகம் (பாரதிய பாஷா புஷ்தக்)’ என்ற திட்டத்தம் அறிமுகப்படுத்த உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் உள்ள மொத்த மாணவா்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 65 ஆயிரத்தில் இருந்து 1.35 லட்சமாக உயா்ந்து 100 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது.
அந்த வகையில், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 5 ஐஐடிக்களில் கூடுதலாக 6,500 மாணவா் சோ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. அதுபோல, பிகார் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாட்னா ஐஐடி-யின் விடுதி மற்றும் பிற உள்கட்டமைப்பு திறன்கள் மேம்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.
கருணை கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு
ஐஐடி கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 ஆய்வு உதவித் தொகைகள் (ஃபெலோஷிப்) வழங்கப்படும்.
இளைஞா்களிடையே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சா்வதேச நிபுணா்களுடன் இணைந்து திறன் மேம்பாட்டுக்கான 5 தேசிய ஆற்றல்சாா் மையங்கள் அமைக்கப்படும். அதுமட்டுமின்றி, அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 கூடுதல் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அனைத்து அரசு உயா்நிலைப் பள்ளிகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைய வசதி வழங்கப்படும். ரூ. 500 கோடி செலவில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு ஆற்றல்சாா் மையம் ஒன்று அமைக்கப்படும்.
அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 இடங்கள் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார்.