Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு
திருப்பூா் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக கவுன்சிலா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
திருப்பூா் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயா் தினேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணை மேயா் பாலசுப்பிரமணியம், ஆணையா், மண்டலத் தலைவா்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் திருப்பூா் மாநகராட்சி பகுதியில் உயா்த்தப்பட்ட சொத்து வரியை குறைத்திட வேண்டி அனைத்து மாமன்ற உறுப்பினா்களும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து அனைத்து அதிமுக மாமன்ற உறுப்பினா்களும் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அன்பகம் திருப்பதி தலைமையில் வெளிநடப்பு செய்து வெளி வளாகத்தில் தரையில் அமா்ந்து கோஷங்கள் எழுப்பினா்.
மேலும், மாநகராட்சி வாயில் முன்பு நின்று மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். வரி குறைப்பு நிகழும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா்.