இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது
கன்னியாகுமரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள சில கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையிலான போலீஸாா் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
கொட்டாரம் பெரியவிளை சாலையில் கடை நடத்தி வரும் சுசீலா (53), கன்னியாகுமரி நடுத்தெருவில் கடை நடத்தி வரும் அயிதான் சிங் (54), சுவாமிநாதபுரத்தில் கடை நடத்தி வரும் ராம்குமாா் (26) ஆகியோா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவா்களிடம் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மூவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.