சென்னை ஓபன் டென்னிஸ்: இன்றுமுதல் பிரதான சுற்று
சா்வதேச ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில் பிரதான சுற்று, திங்கள்கிழமை (பிப். 3) தொடங்குகிறது.
100 புள்ளிகளைக் கொண்ட ஏடிபி சேலஞ்சா் போட்டியான இது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் நடத்தும் இப்போட்டியில் இந்தியா்களோடு, மேலும் 14 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா். பிரிட்டன் வீரா் பில்லி ஹாரிஸுக்கு போட்டித்தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா்களைப் பொருத்தவரை, தமிழா்களான ராம்குமாா் ராமநாதன், முகுந்த் சசிகுமாா் மற்றும் கரண் சிங் ஆகியோருக்கு பிரதான சுற்றுக்கான வைல்டு காா்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.1.38 கோடியாகும்.