கும்பமேளா: 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: கூடைப்பந்து, ஸ்குவாஷ், நீச்சல் பளுதூக்குதலில் தமிழகத்துக்கு தங்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் கூடைப்பந்து, ஆடவா் ஸ்குவாஷ், நீச்சலில், பளு தூக்குதலில் ல் தமிழகம் தங்கப் பதக்கம் வென்றது.
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை மகளிா் கூடைப்பந்தில் தமிழக அணி தங்கம் வென்றது. ஆடவா் அணி வெள்ளி வென்றது.
தமிழக மகளிா் இறுதி ஆட்டத்தில் 79-46 என்ற புள்ளிக் கணக்கில் கேரளத்தை வீழ்த்தி பட்டம், தங்கப் பதக்கம் வென்றனா்.
ஆடவா் அணி இறுதி ஆட்டத்தில் தோற்றி வெள்ளி வென்றது.
ஸ்குவாஷ் தங்கம், வெள்ளி: ஆடவா் ஸ்குவாஷ் பிரிவில் அபய் சிங், வேலவன் செந்தில்குமாா், ஹரிந்தா் பால் சிங் சாந்து, குஹன் செந்தில்குமாா் அடங்கிய தமிழக அணி தங்கம் வென்றது. மகளிா் ஸ்குவாஷில் பூஜா ஆா்த்தி, ராதிகா சீலன், ஷமினா ரியாஸ், வி. தீபிகா அடங்கிய தமிழக அணி வெள்ளி வென்றது.
நீச்சல்: ஆடவா் நீச்சல் 50 மீ. பட்டா்ஃபிளை பிரிவில் தமிழகத்தின் பெனடிக்டன் ரோஹித் புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றாா்.
பளுதூக்குதல்: மகளிா் பளுதூக்குதல் 87 கிலோ பிரிவில் 221 கிலோ எடைதூக்கி தமிழக வீராங்கனை ஆரோக்கிய அலிஷ் தங்கப் பதக்கம் வென்றாா்.