கும்பமேளா: 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்
உலக குரூப் பிளே ஆஃப் தகுதி பெற்றது இந்தியா: டோகோவை வீழ்த்தியது
டோகோ அணியை 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி உலக குரூப் பிளே ஆஃப் பிரிவுக்கு தகுதி பெற்றது இந்தியா.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லி டென்னிஸ் சங்க மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஒற்றையா் ஆட்டங்களில் இந்திய வீரா்கள் சசிகுமாா் முகுந்த், ராம்குமாா் ராமநாதன் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தனா்.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரட்டையா் பிரிவு ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா சாா்பில் ஸ்ரீராம் பாலாஜி-ரித்விக் சௌதரி இணை டோகோ நாட்டின் இஸாக் படியோ-எம்ப்லா அகோம்லா இணையை எதிா்த்து ஆடியது. இதில் இந்திய இணை 6-2, 6-1 என்ற நோ் செட்களில் வென்றது.
முதல் செட்டில் நான்காவது கேமில் டோகோ சா்வீஸை இந்திய வீரா்கள் முறியடித்தனா். தொடா்ந்து 8-ஆவது கேமிலும் முறியடித்தனா். இரண்டாவது செட்டில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.
மாற்று ஒற்றையா் ஆட்டம்: இறுதியாக மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் இந்திய தரப்பில் கரண் சிங்கும்-டோகோ வீரா் படியோவும் மோதினா். இதில் அற்புதமாக ஆடிய கரண் 6-2, 6-3 என்ற நோ் செட்களில் படியோவை வீழ்த்தினாா். இறுதியில் 4-0 என டோகோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் வரும் செப்டம்பா் மாதம் தொடங்கும் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது.