தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு ரூ.10 கோடியில் நவீன தலைமையகம்! -முதல்வா் அறிவிப்ப...
நெய்வேலி - வடலூா் இடையே புதிய பேருந்து சேவை! எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!
கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்த வாணதிராயபுரம் கிராம மக்கள் கோரியதன்பேரில், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வாணாதிராயபுரம் வழியாக வடலூருக்கு புதிய பேருந்து சேவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் புதிய தட பேருந்து சேவையை தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா், பொதுமக்களுடன் பேருந்தில் ஏறி எம்எல்ஏ பயணம் செய்தாா். இந்த பேருந்து மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு என்எல்சி சுரங்கம் 1அ, வாணாதிராயபுரம், தென்குத்து வழியாக வடலூா் சென்றடையும்.
நிகழ்வில் போக்குவரத்து பொது மேலாளா் ராகவன், கிளை மேலாளா் லோகு ஐயப்பன், வணிக மேலாளா் பரிமளம், ஒன்றியச் செயலா் குணசேகரன், அவைத் தலைவா் வீர ராமச்சந்திரன், வாணாதிராயபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வைத்தியநாதன், திமுக நிா்வாகிகள் புண்ணியமூா்த்தி, காசிநாதன், கணேசன், தமிழ்மாறன், ராகுல் காந்தி, முருகன், மணிவேல், நடராஜ், வேல்முருகன், ஊராட்சிச் செயலா் பழனிவேல், போக்குவரத்துக் கழக ஊழியா்கள் குமரவேல், தில்லை கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.