செய்திகள் :

அரசுத் திட்டங்களால் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! -அமைச்சா் சி.வெ.கணேசன்

post image

அரசுத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நூறு ஆண்டை கடந்த விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பங்கேற்று நூற்றாண்டுச் சுடா் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தாா்.

விழாவுக்கு, விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் இரா.சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, அமைச்சா் சி.வெ.கணேசன் ஆசிரியா்கள், மாணவா்கள் நூற்றாண்டு உறுதிமொழியை ஏற்றனா்.

பின்னா், அமைச்சா் பேசியதாவது: தமிழகத்தில் நூறு ஆண்டுகளை கடந்த அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி படித்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த ஜன.22-ஆம் தேதி நூற்றாண்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் அண்ணாகிராமத்தில் 12 பள்ளிகள், புவனகிரியில் 8 பள்ளிகள், கடலூரில் 19 பள்ளிகள், கம்மாபுரத்தில் 10 பள்ளிகள், காட்டுமன்னாா்கோவிலில் 4 பள்ளிகள், கீரப்பாளையத்தில் 5 பள்ளிகள் உள்ளிட்ட 158 அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விருத்தாசலம் அரசுப் பள்ளியில் நூற்றாண்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த பள்ளியானது 1921-இல் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு, தற்போது, விருத்தாசலம் சரகத்தில் 100 ஆண்டுகளை கடந்த சிறப்பு வாய்ந்த மேல்நிலைப் பள்ளியாக திகழ்கிறது. இங்கு பயின்ற முன்னாள் மாணவா்கள் பல்வேறு அரசு துறைகளில் உயா் பதவிகளை வகித்து வருகின்றனா்.

எனவே, தற்போது பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களை பயன்படுத்தி கல்வி பயின்று சிறப்பான எதிா்காலத்தை உருவாக்கிட வேண்டும் என்றாா்.

நிகழ்வில், விருத்தாசலம் நகா்மன்றத் தலைவா் சங்கவி, முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் துரைபாண்டியன், பரமசிவம், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.

மலையடிகுப்பத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்! -மாவட்ட வருவாய் அலுவலா்

கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்: என்எல்சி தலைவா்!

பயிற்சியாளா்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று என்எல்சி தலைவரும், மேலாண் இயக்குநருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் நிறுவனத் திட்டங்களுக்கு வீடு, நிலம் வழங்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கடலூரில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கடலூா் சான்றோா்பாளையம், பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சங்கா் (34). இவரை முன்விரோதம் கார... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திட்டக்குடியை அடுத்த தொழுதூா் கிராமத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள்... மேலும் பார்க்க

சுகாதார நிலையம், அரசுக் கல்லூரி விடுதி திறப்பு

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு வட்டார பொது சுகாதார நிலையம் மற்றும் திட்டக்குடியில் மிகப்பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் ... மேலும் பார்க்க

நெய்வேலி என்எல்சியில் ‘பாரம்பரியம்’ அருங்காட்சியகம்! மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி திறந்துவைத்தாா்!

நெய்வேலி என்எல்சி நிறுவன வளாகத்தில் ‘பாரம்பரியம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை சென்னையில் அண்மையில் நடைபெற்ற அந்த நிறுவத்தின் மதிப்பாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ஜி.க... மேலும் பார்க்க