மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திட்டக்குடியை அடுத்த தொழுதூா் கிராமத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் கோபிநாத் மற்றும் போலீஸாா் தொழுதூா் வ.உ.சி. நகரைச் சோ்ந்த லியாகத் அலி மகன் அசாருதீன் (27) பெட்டிக் கடையில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அசாருதீனை ராமநத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.