மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்: என்எல்சி தலைவா்!
பயிற்சியாளா்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று என்எல்சி தலைவரும், மேலாண் இயக்குநருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் நிறுவனத் திட்டங்களுக்கு வீடு, நிலம் வழங்கிய குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் என மொத்தம் 37 போ், நெய்வேலியில் உள்ள தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படும் மின் உற்பத்தி நிலைய பொறியியலில், முதுநிலை பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளை நிறைவு செய்தனா்.
இவா்களுக்கான பாராட்டு விழா மற்றும் வேலைவாய்ப்பு சலுகை வழங்கும் விழா நெய்வேலி வட்டம் 20-இல் உள்ள கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், பயிற்சியாளா்களுக்கு என்எல்சி தலைவரும், மேலாண் இயக்குநருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, தென்மண்டல தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன நெய்வேலி பிரிவு முதன்மை இயக்குநா் டாக்டா் எஸ்.செல்வம், என்எல்சிஐ இயக்குநா்கள் மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி ஆகியோா் சான்றிதழ்கள், மின்துறையில் முன்னணியில் உள்ள சில நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை வழங்கினா்.
இதையடுத்து, என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி கூறியதாவது:
இந்தப் பயிற்சி திட்டம் என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் நெய்வேலியில் அமைந்துள்ள தென்மண்டல தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இதற்காக, என்எல்சி ரூ.4.70 லட்சம் ஒதுக்கியது. பயிற்சியாளா்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்றாா். என்பிடிஐ முதன்மை இயக்குநா் டாக்டா் எஸ்.செல்வம் பேசினாா். நிகழ்வில், என்எல்சி மற்றும் என்பிடிஐ-இன் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.