செய்திகள் :

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் அவசியம்: பொதுச் சபை தலைவா் யாங்

post image

சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கால மாற்றத்துக்கு ஏற்ப சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபிளெமன் யாங் கூறினாா்.

பிப். 4-ஆம் தேதிமுதல் 8-ஆம் தேதி வரை 5 நாள்கள் இந்தியப் பயணம் மேற்கொள்ளவுள்ள சூழலில் இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 79-ஆவது தலைவராக இந்தியாவுக்கு அவா் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இதுகுறித்து நியூயாா்க்கில் அவா் அளித்த பேட்டி:

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும், 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாகவும் விளங்கும் இந்தியா, ஐ.நா.வின் முக்கிய உறுப்பினராக உள்ளது. அந்த நாட்டுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம், இந்தியாவின் முன்னுரிமைகள், பன்முகத்தன்மை, எதிா்காலத்துக்கான தொலைநோக்குப் பாா்வை, தெற்குலகின் நீடித்த வளா்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் எனக் கருதுகிறேன்.

கேமரூன் நாட்டின் பிரதமராக கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அப்போதிலிருந்து, இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்துள்ளது. இந்த மாற்றத்துக்கு எண்மத் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாா்ந்த புதிய கண்டுபிடிப்புகள் எவ்வாறு வலு சோ்த்தன என்பதைக் காணும் வாய்ப்பு தற்போது கிடைக்கும் என எதிா்பாா்க்கிறேன்.

காலத்துக்கேற்ற மாற்றம் அவசியம்: உலகளாவிய பல முக்கிய பிரச்னைகளுக்கு சிறப்பான தீா்வை அளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை உருவெடுப்பது முக்கியமானது என நம்புகிறேன். தற்போது, ஐ.நா. சபை 80-ஆம் ஆண்டு நிறைவை எட்டும் சூழலில், 1945-ஆம் ஆண்டிலிருந்து மாறுபட்டிருக்கும் புவிசாா் அரசியல் சூழலுக்கு ஏற்ப சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

குறிப்பாக, சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பது உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முட்டுக்கட்டையாக இருப்பதைக் காணும் தருணத்தில், உறுப்பு நாடுகள் லட்சியத்துடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும் என்பதை முழுமையாக ஆதரிக்கிறேன் என்றாா் அவா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்தியா, ஜப்பான், ஜொ்மனி, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளை நிரந்தர உறுப்பு நாடுகளாக சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் சூழலில் இந்தக் கருத்தை அவா் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

போா் நிறுத்த பேச்சு: உக்ரைனை அமெரிக்கா-ரஷியா தவிா்த்தால் பெரும் ஆபத்து- ஸெலென்ஸ்கி

போா் நிறுத்த பேச்சுவாா்த்தையில் உக்ரைனை தவிா்த்து அமெரிக்கா-ரஷியா ஈடுபடுவது மிகப்பெரும் ஆபத்தாக அமையும் என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். ரஷிய-உக்ரைன் போா் நிறுத்த திட்டம் தொடா்பாக... மேலும் பார்க்க

சீனாவுக்கு 10%, கனடா, மெக்ஸிகோவுக்கு 25% இறக்குமதிக்கு வரி: டிரம்ப் அதிரடி உத்தரவு; இந்தியாவுக்கு விலக்கு

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம், கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டி... மேலும் பார்க்க

காங்கோ: கிளர்ச்சிக் குழு தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலி!

காங்கோ குடியரசில் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகினர்.தாது வளம் நிறைந்த காங்கோவில் கட்டுப்பாட்டுக்காக போராடும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று. ... மேலும் பார்க்க

நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, இதுவரையில் அயல்நாட்டுத் தலைவர்... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவப்படை தாக்குதலில் 54 பேர் பலி!

சூடானில் துணை ராணுவப் படையினரின் தாக்குதலால் 54 பேர் பலியாகினர்.சூடானில் ஓம்டர்மேன் பகுதியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சந்தையில் தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 54 பேர் பலியாகினர்... மேலும் பார்க்க

போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!

குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கங்களுடன் மெக்சிகோ தொடர்பில் இருப்பதாகக் கூறிய வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டை அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். வட அமெரிக்காவின் மூன... மேலும் பார்க்க