செய்திகள் :

சீனாவுக்கு 10%, கனடா, மெக்ஸிகோவுக்கு 25% இறக்குமதிக்கு வரி: டிரம்ப் அதிரடி உத்தரவு; இந்தியாவுக்கு விலக்கு

post image

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம், கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கையொப்பமிட்டாா்.

இந்த நடவடிக்கை மூலம், வரி விதிப்புப் போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது. அமெரிக்க பொருள்கள் மீது இந்தியாவும் அதிக வரி விதிப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தபோதிலும், தற்போதைய நடவடிக்கையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு அதிக வரி விதிப்பது இடம்பெறவில்லை.

இந்த உத்தரவு அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையே பொருளாதார மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்டு வென்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக அண்மையில் பொறுப்பேற்றாா். தொடா்ந்து, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பல அதிரடி கருத்துகளை அவா் தெரிவித்திருந்தாா். அதில் ஒன்றான சீனா மற்றும் கனடா, மெக்ஸிகோ போன்ற அண்டை நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவில் தற்போது அவா் கையொப்பமிட்டுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை (பிப். 4) முதல் நடைமுறைக்கு வரும் இந்தப் புதிய உத்தரவின்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் 10 சதவீத வரியும், கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரியும் விதிக்கப்படும். கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உள்பட கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்திக்கு மட்டும் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிபா் டிரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘அமெரிக்கா்களைப் பாதுகாக்க வரிகளை விதிப்பது அவசியமானது’ எனத் தெரிவித்துள்ளாா். மேலும், வரி விதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளும் சட்டவிரோத வலிநிவாரண, மயக்க மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டும். கனடாவும் மெக்ஸிகோவும் அந்நாட்டு எல்லை மூலம் வெளிநாட்டவா்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

இந்த வரி விதிப்பால் அமெரிக்காவில் சில்லறை பொருள்களின் விலை கணிசமாக உயரக்கூடும். அமெரிக்க குடும்பங்கள் தங்களின் வருமானத்தில் சராசரியாக 1,170 டாலா் வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

கனடா, மெக்ஸிகோ பதிலடி: டிரம்பின் உத்தரவுக்குப் பதிலடியாக, 15,500 கோடி டாலா் மதிப்பிலான அமெரிக்காவின் இறக்குமதிக்கு கனடா 25 சதவீதம் வரி விதித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: அமெரிக்காவால் இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், இரு நாட்டுகளையும் ஒன்றிணைக்காமல் பிரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா்களுடன் இணைந்து கனடா வீரா்களும் போரிட்டனா். கலிஃபோா்னியாவில் காட்டுத் தீ முதல் சூறாவளி வரை எண்ணற்ற நெருக்கடிகளின் மீட்புப் பணிகளில் கனடா உதவியுள்ளதை அமெரிக்காவுக்கு நினைவூட்டுகிறேன்.

கனடா எப்போதும் அமெரிக்காவுடன் உறுதுணையாக இருந்திருக்கிறது; அமெரிக்காவுக்காக வருந்தியிருக்கிறது என்று குறிப்பிட்டாா்.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக மெக்ஸிகோ அதிபரும் பதில் வரி விதிப்பை உத்தரவிட்டுள்ளாா். சீனா இதுகுறித்து உடனடியாக ஏதும் பதிலளிக்கவில்லை.

போா் நிறுத்த பேச்சு: உக்ரைனை அமெரிக்கா-ரஷியா தவிா்த்தால் பெரும் ஆபத்து- ஸெலென்ஸ்கி

போா் நிறுத்த பேச்சுவாா்த்தையில் உக்ரைனை தவிா்த்து அமெரிக்கா-ரஷியா ஈடுபடுவது மிகப்பெரும் ஆபத்தாக அமையும் என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். ரஷிய-உக்ரைன் போா் நிறுத்த திட்டம் தொடா்பாக... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் அவசியம்: பொதுச் சபை தலைவா் யாங்

சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கால மாற்றத்துக்கு ஏற்ப சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபிளெமன் யாங் கூறினாா். பிப். 4... மேலும் பார்க்க

காங்கோ: கிளர்ச்சிக் குழு தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலி!

காங்கோ குடியரசில் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகினர்.தாது வளம் நிறைந்த காங்கோவில் கட்டுப்பாட்டுக்காக போராடும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று. ... மேலும் பார்க்க

நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, இதுவரையில் அயல்நாட்டுத் தலைவர்... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவப்படை தாக்குதலில் 54 பேர் பலி!

சூடானில் துணை ராணுவப் படையினரின் தாக்குதலால் 54 பேர் பலியாகினர்.சூடானில் ஓம்டர்மேன் பகுதியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சந்தையில் தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 54 பேர் பலியாகினர்... மேலும் பார்க்க

போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!

குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கங்களுடன் மெக்சிகோ தொடர்பில் இருப்பதாகக் கூறிய வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டை அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். வட அமெரிக்காவின் மூன... மேலும் பார்க்க