செய்திகள் :

விடாமுயற்சி : '4000 ஆண்டுகள் அணையாமல் எரியும் தீ' - Azerbaijan பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

post image
அஜர்பைஜான், காஸ்பியன் கடலோரத்தில் அமைந்துள்ள ஆசிய நாடாகும். அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் மூலம் இந்த நாடு பற்றிய ஆர்வம் தமிழத்திலும் எழுந்துள்ளது.

ரஷ்யா, ஜார்ஜியா, அர்மேனியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது அஜர்பைஜான்.

அஜர்பைஜானில் தொடக்கத்தில் மெடியன் மொழி பேசிய மெடெ பழங்குடிகள், பாரசீகர்கள் வாழ்ந்தனர். அலெக்ஸாண்டர் தி கிரேட், அசெமினிட் சாம்ராஜியத்தை கைகொண்டபோது இங்கு கிரேக்க கலாச்சாரம் வேறூன்றியது. அவரின் தளபதிகளில் ஒருவர் இங்கு ஆட்சி செய்தார்.

Azerbaijan

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், ஷிர்வன்ஷாக்கள், மங்கோலியர்கள் அஜர்பைஜானை ஆட்சி செய்திருக்கின்றனர். பின்னர் பாரசீக பேரரசின் ஆளுகையில் இருந்து ரூசோ-பாரசீக போர் முடிவில் ரஷ்ய பேரரசின் கைகளுக்குச் சென்றது.

1918-ம் ஆண்டு அஜர்பைஜான் ரஷ்ய பேரரசில் இருந்து விடுதலை பெற்று, இஸ்லாமிய உலகின் முதல் மதசார்பற்ற மக்களாட்சி நாடாக உருவானது. ஆனால் 1920-ம் ஆண்டே சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சோவியத் சோசலிச குடியரசு நாடாக மாறியது. இந்த காலகட்டத்தில் அஜர்பைஜானின் கலாச்சாரமும் அரசியலும் சரிவை கண்டாலும் தொழில்துறைகள் வளர்ச்சிபெற்றன. முக்கியமாக அஜர்பைஜான் தலைநகரமான பாகு எண்ணெய் மையமாக உருவானது.

1991-ம் ஆண்டு சோவியத் ரஷ்யா உடைந்ததில் தனி நாடாக உருவானது அஜர்பைஜான். இன்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா என இரு தரப்புடனும் உறவுகளைப் பேணும் நாடாக இருக்கிறது அஜர்பைஜான்.

விடாமுயற்சி

அஜர்பைஜான் பொருளாதாரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் ஜி.டி.பி-யில் 47.8% இதிலிருந்து பெறப்படுகிறது.

இன்று அஜர்பைஜானில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதிபேர் தலைநகர் பாகுவில் உள்ளனர். விடாமுயற்சி படத்தில் அஜித்தும் த்ரிஷாவும் கூட பாகுவில்தான் வசிப்பார்கள்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடாக இருந்தாலும், மதசார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறது அஜர்பைஜான். இங்கு கிறிஸ்தவர்களும், யூதர்களும் சில பழங்குடிகளும் வசிக்கின்றனர்.

Azerbaijan பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:

> அஜர்பைஜானை நெருப்பின் நிலம் "The Land of Fire" என்று அழைக்கின்றனர். அஜர்பைஜான் என்ற வார்த்தைக்கு நெருப்பின் பாதுகாவலர் என்று பொருள். இங்கு நெருப்பை வழிபடும் மரபு உள்ளது.

>  Yanar Dağ என்ற இயற்கையாக உருவான நெருப்பு இங்கு 4000 ஆண்டுகள் அணையாமல் எரிவதாக நம்பப்படுகிறது. இந்த மலையின் கீழிருந்து எரிவாயு கசிவதாக அறிவியலாளர்கள் கூறிகின்றனர். எனினும் 10மீ நீளத்தில் எரியும் இந்த நெருப்பு, 4000 ஆண்டுகள் எரிவதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை.

> பெட்ரோலியம், எரிவாயு நிறைந்த அஜர்பைஜான் மலைகளில் நூற்றாண்டுகளாக தொடர்ந்து எரியக் கூடிய நெருப்பு இருந்ததாக 13ம் நூற்றாண்டு பதிவு ஒன்று கூறுகிறது.

Yanar Dağ

> 1918ம் ஆண்டு அஜர்பைஜானில் தோன்றிய மக்களாட்சி அரசு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இதைச் செயல்படுத்திய முதல் நாடு அஜர்பைஜான் என்பதுடன், இந்த விஷயத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளுக்கு முன்னோடியாக இருந்துள்ளது.

> அஜர்பைஜானில் 350க்கும் அதிகமான சேற்று எரிமலைகள் உள்ளன. உலகின் சேற்று எரிமலை தலைநகரம் என்று பாகு மற்றும் அதனை சுற்றியுள்ள காஸ்பியன் பகுதிகளைக் குறிப்பிடுகின்றனர்.

Mud Valcano

> அஜர்பைஜான் எண்ணெய் வளமிக்க நாடு என்பதைப் பார்த்தோம். 1901ம் ஆண்டு பாகுவின் எண்ணெய் வயல்களின் ஏற்றுமதி உலகின் மொத்த ஏற்றுமதியில் 50 விழுக்காடாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சோவியத் யூனியன் வெற்றிக்குக்கு அஜர்பைஜானிலிருந்து அனுப்பப்பட்ட எண்ணெய் முக்கிய காரணமாக அமைந்தது.

> இங்குள்ள ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம் உலகின் கட்டடக்கலை அற்புதங்களில் ஒன்று. ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.

> பாகுவின் பழைய நகரில் உலகின் முதல் தனியார் மினியேச்சர் புத்தக நூலகம் உள்ளது. இங்கு 5,500க்கும் மேலான மினியேச்சர் புத்தகங்கள் உள்ளதாக கின்னஸ் புத்தகம் தெரிவிக்கிறது.

> உலகின் அழகான குதிரையினங்களில் ஒன்றான கராபக் குதிரைகள் அஜர்பைஜானைச் சேர்ந்தவை. இவற்றின் வேகம் மற்றும் ஆற்றலுக்காக அறியப்படுகின்றன. 1956ல் எலிசபத் மகாராணிக்கு இந்த குதிரைகளைப் பரிசாக அளித்துள்ளனர்.

> மலை சறுக்கிலும் புல்வெளியிலும் சீறிப்பாயும் இந்த குதிரையை வைத்து Chovqan என்ற பாரம்பரிய விளையாட்டை விளையாடுகின்றனர்.

Kabarakh Horse

> அஜர்பைஜான் கலாச்சாரத்துக்கு உலகளவில் செல்வாக்கு உள்ளது. இங்குள்ள மக்கள் பல நூற்றாண்டுகளாக கைகளால் பின்னும் தரை விரிப்புகள் இன்றும் அதே முறையில் பின்னப்பட்டு, பல நாடுகளுக்கு அனுப்பபடுகிறது.

> அஜர்பைஜானின் மிக முக்கிய சுற்றுலாத்தளமாக திகழ்வது, கினாலுக் (Khinaliq) என்ற பழமையான ககாசியன் கிராமம்தான். அஜர்பைஜானின் பழைமையான கலாசாரத்தை அறிந்துகொள்ள உதவும் இந்த கிராமத்தை யுனெஸ்கோ பாரம்பரிய தளத்தில் ஒன்றாக இணைத்துள்ளனர். இங்குள்ள வீடுகளின் அமைப்புகள் காட்டின் குளிரிலிருந்தும் கடுமையான பனியிலிருந்தும் காத்துக்கொள்ள உதவுகின்றன. இங்குள்ள மக்கள் பழமையான ககாசியன் அல்பேனியன் பழங்குடியாக அறியப்படுகின்றனர். Ketsh என்ற தனித்துவமான மொழியைப் பேசுகின்றனர்.

khinalug azerbaijan

> உலகின் முதல் எண்ணைக்கப்பல் சுரோஸ்டர் (Zoroaster) 1879ம் ஆண்டு நோபல் அசோதரர்களால் அஜர்பைஜானின் பாகு நகரத்துக்குதான் அனுப்பப்பட்டது.

> அஜர்பைஜான் - ஈரான் எல்லைக்கு அருகே அரஸ்ஆற்றில் குடாஃபரின் பாலம் (Khudafarin Bridge) என்ற பாலம் உள்ளது. 1027ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் வரலாற்றில் வணிக முக்கியத்துவம் கொண்டதாக இருந்துள்ளது. கட்டப்பட்டது முதல் இன்று வரை பல போர்களை சந்தித்துள்ள இந்த பாலம், அஜர்பைஜான் ஒற்றுமையின் சின்னமாக பார்க்கப்படுகிறது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

`The Migrant Mother' : இந்த புகைப்படம் பிரபலம் ஆனது ஏன்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'புதிய கற்கால கருவிகள், இரும்புக் கால பாத்திரங்கள்...' - சென்னனூர் அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகள்

"தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் வரலாறு எழுதப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது" என்ற என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் வி... மேலும் பார்க்க

ஆல்பிரட் நோபல் `மரண வியாபாரி’ என்ற அடையாளத்தை துடைத்து எறிந்தது எப்படி?| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோஹினூர் - ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு | My Vikatan

இங்கிலாந்து ராணியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் 2022 இல் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது.இங்கிலாந்து அரசிடமிருந்து மீட்டு, கோஹினூர... மேலும் பார்க்க

175 ஆண்டுகள் பழமையான ஊட்டி போலீஸ் ஸ்டேஷன்... குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகிறதா?

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஜான் சல்லிவன் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள், நவீன ஊட்டி நகரை நிர்மாணித்தனர். 'ஸ்டோன் ஹவுஸ்' எனப்படும் முதல் கல் பங்களா ஒன்றை எழுப்பியதுடன் பல்வேறு கட்டுமானங்களைய... மேலும் பார்க்க