ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
சத்துணவு அமைப்பாளா்களுக்கு பயிற்சி
போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புரட்சித் தலைவா் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்களுக்கு நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் பெ.பாபு (வ.ஊ) தலைமை வகித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் அ.சு.லட்சுமி (கி.ஊ), துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி (சத்துணவு) வரவேற்றாா்.
சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் பாதுகாப்பு குறித்து பயிற்சியை மாவட்ட பயிற்சியாளா் திவ்யாஅளித்தாா்.
ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளா்கள்
பலா் கலந்து கொண்டனா்.